விஞ்ஞானம்


 

 

 

கடலுக்குள் மூழ்கிய உலகம் கண்டுபிடிப்பு

E-mail அச்செடுக்க


 



















ஸ்காட்லாந்தின் வடக்குக் கரையருகே வட அட்லாண்டிக் பெருங்கடலின் ஆ..ஆ...ஆ ...ழத்தில் வீழ்படிவாய் பாரிய நிலப்பரப்பு இருப்பதை புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மிகவும் பண்டைய உலகமாய் இருக்கலாம் என்றும் அவர்கள் கருத்தளித்துள்ளனர்.

சுமார் 56 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இப்பாரிய நிலப்பரப்பில் நதிகளும் -  முன்பு மலைகளாக இருந்தவற்றின் மிச்சங்களாய் - நில உச்சங்களும் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகின்றனவாம். அவை ஒரு கடற்கரை நாட்டின் வரைபடம் போன்று காட்சியளிப்பதாகவும், இந்தப் படிவுகள் கடற்படுக்கையின் கீ...ழே இரண்டு கி.மீ தொலைவில் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் நில ஆய்வியல் மூத்த அறிஞர் நிக்கி வைய்ட் தெரிவித்துள்ளார்.

மேம்படுத்தப்பட்ட எதிரொலி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட இந்த ஆய்வின் மூலம் சுமார் 10,000 ச.கி.மீ பரப்பளவு  கொண்ட இப்பாரிய நிலப்பரப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன

அணுசக்தியின் நிறம் பச்சையல்ல; இரத்தச்சிவப்பு!

E-mail அச்செடுக்க

 
ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரும் பூகம்பம் அணுமின் சக்தி பற்றிய விவாதத்தை மீண்டும் தொடக்கியுள்ளது. அணுசக்தியின் நிறம் நமக்கு காட்டப்பட்டிருப்பதைப் போல பச்சையல்ல; இரத்தச்சிவப்பு.

அணுமின் நிலையம் நிச்சயமாக வெடிக்கக்கூடிய டைம்பாம். தற்போதுள்ளவை  ஹிரோஷிமா நாகசாகியில் வெடித்தவைகளைவிட பல லட்சம் படங்கு அழிவை ஏற்படுத்தக் கூடியவை. இயங்கு நிலையில் இருக்கும் (வெடிக்காமல்) ஒரு அணுமின் நிலையத்தின் ஏற்றுக் கொள்ளக்கூடிய கதிரியக்க அளவு என்பதே மிக அபாயகரமான அளவே.

இதுவரை வெடிக்கப்பட்டுள்ள இரண்டு அணுகுண்டுகளினால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை விட அமெரிக்காவில் மட்டும் அணுமின் உலைகளினாலும் சோதனைகளினாலும் கொல்லப்பட்ட, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது அதிர்ச்சி தரும் செய்தி.

அனல்மின் / நிலவாயு மின் நிலையங்கள் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை விட அல்லது போபால் யூனியன் கார்பைட் தொழிற்சாலை வெளியிட்டதை விட மிக அதிக சுற்றுச்சூழல் அபாயத்தை அணுமின் நிலையங்கள் ஏற்படுத்துகின்றன. அணுமின் நிலையங்கள் மீது ஒரு பூகம்பம் அல்லது தீவிரவாத தாக்குதல் போதும்; மனித குலத்தின் மிகப்பெரும் பகுதியை, மிருகங்கள் மற்றும் பசுமை உலகத்தை ஒரே வீச்சில் அழித்து முடிக்க.

இதற்கு ஒரே தீர்வு இனியொரு அணுமின் உலைகளை கட்டமைக்காமல் இருப்பதும், இருக்கும் உலைகளை உடனடியாக செயலற்று போகச்செய்வதும்தான். "நாம் இயற்கையுடன் வாழ கற்றுக் கொள்ளவேண்டும்; இயற்க்கையைத் திண்று அல்ல" என்ற காந்தியின் வார்த்தை இங்கு பொருத்தமாக இருக்கும்.
நமக்கு உண்மையிலேயே தேவைப்படும் அளவு வாழ்க்கை சாதனங்கள், சக்தி மற்றும் வசதிகளை மட்டுமே கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

நுகர்வு கலாச்சார மோகத்தினால் உந்தப்பட்டு அணுசக்தி மட்டுமல்ல சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பயன்பாடு, உடல் திசுக்களை கொல்லும் செல்போன் பயன்பாடு போன்ற அனைத்தும் மனிதகுல நலனுக்கெதிராக நாமே குழி தோண்டிக்கொண்டுள்ளோம் என்பதையே காட்டுகிறது

பூமியின் எடையில் மாற்றம்! பூமி சுற்றும் வேகம் அதிகரிப்பு!

E-mail அச்செடுக்க

"ஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கம், பூமி சுற்றும் வேகத்தை அதிகரித்துள்ளது. அதனால், ஒரு நாளின் நேரத்தில் குறைவு ஏற்படும்' என்று, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பானில் கடந்த 11ம் தேதி நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி ஏற்பட்டது. அந்நாட்டின் மூன்று மாகாணங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாயின. மேலும், இரண்டு மாகாணங்கள் ஓரளவு பாதிக்கப்பட்டன. ஜப்பான் பல தீவுக் கூட்டங்களால் ஆன நாடு.

எனினும், ஹொக்கைடோ, ஹோன்ஷூ, ஷிகோக்கு, கியூஷூ என்ற நான்கு பெரிய தீவுகள் தான் முக்கியமானவை. இவற்றிலும், ஹோன்ஷூ தான் மிகப் பெரியது. இதில் தான், தலைநகர் டோக்கியோ உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹோன்ஷூ தீவு, 8 அடி நகர்ந்துள்ளதாகவும், பூமியின் அச்சு 17 செ.மீ., நகர்ந்துள்ளதாகவும் அமெரிக்க நிலவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் மேலும் கூறியதாவது:தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பூமியின் எடையில் சிறிது மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது சுற்றும் வேகம் சிறிது அதிகரித்துள்ளது. இதனால், ஒரு நாளில் மொத்த வினாடிகளில் 1.8 மைக்ரோ வினாடிகள் குறையும். ஒரு நாள் என்பது 86,400 வினாடிகள் கொண்டது.

இந்த மாற்றத்தால், பாதிப்பு எதுவும் ஏற்படாது. இதுபோன்ற அச்சு மாற்றங்கள் பூமியின் வரலாற்றில் சகஜம் தான். கடந்த 2010ல் சிலியில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கத்தால், ஒரு நாளில் 1.26 மைக்ரோ வினாடிகளும், 2004ல் சுமத்ராவில் நிகழ்ந்த 9.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் 6.8 மைக்ரோ வினாடிகளும் குறைந்துள்ளன.இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்தனர்